அதிமுக அரசு நீதிமன்றத்தை மதிக்க வேண்டும்: ராமதாஸ்

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
அதிமுக அரசு நீதிமன்றத்தை மதிக்க வேண்டும்: ராமதாஸ்

ஜனநாயகத்தை காக்க, அதிமுக அரசு நீதிமன்றங்களை மதித்து நடக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு தமிழக அரசு அடிக்கடி ஆளாகினாலும்  மீண்டும், மீண்டும் நீதிமன்றங்களை அவமதிப்பதையே செய்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

அரசுத்துறை பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க ஆணையிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்  தமிழக அரசுக்கு இருமுறை அபராதம் விதித்துள்ளதை ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

கீழ்நீதிமன்றங்கள் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை யார் கண்டனம் தெரிவித்தாலும், அதை துடைத்து எறிந்து விட்டு செல்வதையே அதிமுக அரசு வழக்கமாக கொண்டிருப்பதாகவும் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழக அரசுக்கு எதிராக 21,000 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறியுள்ள ராமதாஸ், ஜனநாயகத்தை காக்க இனியாவது தமிழக அரசு  நீதிமன்றங்களை மதித்து நடக்க வேண்டும் என்றும்  வலியுறுத்தியுள்ளார்.

மூலக்கதை