சென்னை, திருச்சி விமான நிலையங்களில் தங்கம் பறிமுதல்
சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களில் கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
துபாயிலிருந்து சென்னை வந்த பயணி ஒருவரிடமிருந்து ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 30 லட்ச ரூபாய் என சுங்கத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
துபாயிலிருந்து சென்னை வந்த ரஹ்மான் என்ற பயணியின் சூட்கேசை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் 100 கிராம் மதிப்புள்ள 10 தங்க பிஸ்கெட்டுக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் ரஹ்மானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று, திருச்சி விமான நிலையத்தில் 1.5 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது. இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த ஜெயசந்திரன் முருகேசன், விமான நிலைய ஒப்பந்த தொழிலாளி சத்தியசீலன் ஆகிய இருவரை பிடித்து மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
