சென்னை, திருச்சி விமான நிலையங்களில் தங்கம் பறிமுதல்

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
சென்னை, திருச்சி விமான நிலையங்களில் தங்கம் பறிமுதல்

சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களில் கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

துபாயிலிருந்து சென்னை வந்த பயணி ஒருவரிடமிருந்து ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 30 லட்ச ரூபாய் என சுங்கத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். 

துபாயிலிருந்து சென்னை வந்த ரஹ்மான் என்ற பயணியின் சூட்கேசை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் 100 கிராம் மதிப்புள்ள 10 தங்க பிஸ்கெட்டுக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள்  ரஹ்மானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதேபோன்று, திருச்சி விமான நிலையத்தில் 1.5 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது. இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த ஜெயசந்திரன் முருகேசன், விமான நிலைய ஒப்பந்த தொழிலாளி சத்தியசீலன் ஆகிய இருவரை பிடித்து மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை