​எம்.எல்.ஏ. சீட்டு வாங்கித் தருவதாக மோசடி: 8 பேர் கைது

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​எம்.எல்.ஏ. சீட்டு வாங்கித் தருவதாக மோசடி: 8 பேர் கைது

சசிகலாவின் சகோதரர் திவாகரன் மூலமாக அதிமுகவின் சார்பில் தேர்தலில் போட்டியிட எம்.எல்.ஏ. சீட்டு வாங்கித்தருவதாக கூறி 10 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி கே.கே. நகர் பகுதியை சேர்ந்தவர் அதிமுக பிரமுகர் கார்த்திகேயன். இவருக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட எம்.எல்.ஏ. சீட்டு வாங்கி தருவதாக கூறி, அரவாக்குறிச்சியை சேர்ந்த ஆயிஷாபேகம் என்பவர் ஆசைவார்த்தி கூறியுள்ளார். சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு நெருக்கமானவர்கள் மூலம் சீட்டு வாங்கி தருவதாக கூறிய அவர் இதற்காக 10 லட்சம் ரூபாய் பேரம் பேசியுள்ளார். பின்னர் பணத்துடன் மன்னார்குடி சென்ற கார்த்திகேயனை, சுதாகரனை சந்திக்க விடாமல், ஆயிஷாபேகம் மிரட்டியதாக கூறப்படுகிறது. 

இதனை அடுத்து மன்னார்குடி காவல் நிலையத்தில் கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில், ஆயிஷாபேகம், சென்னையை சேர்ந்த ஆர்.டி.சேகர், பிரசாந்த் குமார் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 சொகுசு கார்கள், செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

மூலக்கதை