​தேர்தல் ஏற்பாடு: ஆட்சியர்களுடன் தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​தேர்தல் ஏற்பாடு: ஆட்சியர்களுடன் தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, சென்னை உட்பட 8 மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் அதிகாரி ராகேஷ் லக்கானி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன. கோவை, மதுரை மண்டலங்களில் தேர்தல் ஆலோசனை கூட்டம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், இன்று 2-ம் கட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. 

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களின் ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், உயர் அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.

மூலக்கதை