​கேரள எல்லையில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் - கண்காணிப்பு தீவிரம்

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​கேரள எல்லையில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம்  கண்காணிப்பு தீவிரம்

கேரள வனப்பகுதியில், மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்ததை அடுத்து தமிழக எல்லைக்குள் அவர்கள் நுழைந்து விடாமல் தடுக்க கூடலூர் உள்ளிட்ட 6 சோதனைச்சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர். 

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலுள்ள சுல்தான்பத்தேரியில் சுற்றித்திரியும் மாவோயிஸ்டுகள், நேற்று நீதிமன்ற வளாத்தில் அரசுக்கு எதிராக சுவரொட்டிகளை ஒட்டிச் சென்றதால் பதற்றம் ஏற்பட்டது. அவர்கள் தமிழக எல்லைக்குள் நுழையாமல் இருக்க போலீசார் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். கேரள எல்லையை ஓட்டிய கூடலூர், பந்தலூர் பகுதிகளில் உள்ள 6 சோதனைச் சாவடிகளில் 2 துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  

மேலும், கேரளாவில் இருந்து வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. 

மூலக்கதை