​“படிப்பை தவிர எல்லா வேலைகளையும் செய்தோம்”: எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவர்கள் வேதனை

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL

கள்ளக்குறிச்சி அருகே உள்ள எஸ்.வி.எஸ் மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.  அப்போது, எந்த வித அடிப்படை வசதியும் இன்றி கல்லூரி செயல்பட்டு வந்ததாகவும், படிப்பு தவிர்த்த பல்வேறு வேலைகளில் தாங்கள் ஈடுபடுத்தப்பட்டு, கொத்தடிமைகளாக நடத்தப்பட்டதாகவும் மாணவர்கள் வேதனை தெரிவித்தனர். 

எஸ்.வி.எஸ். கல்லூரியில் நடைபெற்ற முறைகேடு குறித்து தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவு உட்பட பல்வேறு இடங்களில் புகார் அளிக்கப்பட்ட போதிலும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.

மேலும், எஸ்.வி.எஸ். கல்லூரியில் நடைபெற்ற கட்டுமானப் பணியிலும், மாணவ, மாணவிகளையே கல்லூரி நிர்வாகம் ஈடுபடுத்தியதாக, செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற மாணவி ஒருவர் புகார் தெரிவித்தார்.

அதேசமயம் தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தின் உதவியுடன் தான், கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ். கல்லூரி செயல்பட்டு வந்தது என்று மக்கள் உரிமை பாதுகாப்பு கழகத்தின் சென்னை மண்டல செயலாளர் வழக்கறிஞர் மில்டன் குற்றம்சாட்டியுள்ளார்.  

மூலக்கதை