​கோவை விமான நிலைய விரிவாக்கம்: கையகப்படுத்தும் நிலத்திற்கு குறைவான இழப்பீடு

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​கோவை விமான நிலைய விரிவாக்கம்: கையகப்படுத்தும் நிலத்திற்கு குறைவான இழப்பீடு

கோவை விமான நிலையம் விரிவாக்கப் பணிகளுக்கு கையகப்படுத்தும் நிலத்திற்கு மிக குறைவான இழப்பீட்டு தொகை வழங்க முடிவு செய்துள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு இருகூர், நிலாம்பூர், சிங்காநல்லூர், காளப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில், 628 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. 

இதற்கான நிலம் கையப்படுத்துதல் தொடர்பான நடவடிக்கைகள், விமான நிலைய வருவாய் அலுவலர்கள், மாநில பொதுப்பணித்துறை மற்றும் விமான நிலைய பதிவாளர் தலைமையில் நடைபெற்று வருகிறது. 

இருகூர் பகுதியில் கையகப்படுத்தப்பட உள்ள 30 ஏக்கர் நிலத்தின் உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஒரு சதுர அடிக்கு 200 ரூபாய் மட்டுமே இழப்பீடு தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதனால் நிலம் அளித்தவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், அரசு உரிய இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் எனவும், நிலத்தை தரும் குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கு கல்வித் தகுதிக்கேற்ப அரசுப்பணி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூலக்கதை