அதிமுகவில் இருந்து பழ. கருப்பையா அதிரடி நீக்கம்

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
அதிமுகவில் இருந்து பழ. கருப்பையா அதிரடி நீக்கம்

அதிமுகவில் இருந்து துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழ. கருப்பையா நீக்கப்பட்டுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று விடுத்துள்ள அறிக்கையில், அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பழ. கருப்பையா நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாகவும், அதிமுகவின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் செயல்பட்டதாலும் பழ. கருப்பையா நீக்கப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் பேசிய பழ. கருப்பையா, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை