‘நான் எந்த தவறும் செய்யவில்லை’ - நியூயார்க் கோர்ட்டில் நிகோலஸ் மதுரோ வாதம்
வாஷிங்டன், தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும், இதனால் அமெரிக்க இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் சூழல் ஏற்படுவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வந்தார். மேலும் போதைப்பொருள் கடத்தலுக்கு வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாக டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். இதனிடையே, வெனிசுலா கடற்பகுதியில் அமெரிக்க கடற்படை ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது வெனிசுலாவில் இருந்து போதைப்பொருள் கடத்தி வந்ததாக கூறி பல்வேறு கப்பல்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை முறியடிப்போம் என சூளுரைத்தார். இந்த சூழலில், வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் நகரில் கடந்த 3-ந்தேதி அதிகாலை 2 மணியளவில் சுமார் 7 இடங்களில் அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து நிக்கோலஸ் மதுரோவும், அவருடைய மனைவி சிலியா புளோரசும் அமெரிக்க ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டு வெனிசுலாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் மீது நியூயார்க் நகரில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், நியூயார்க் கோர்ட்டில் நிகோலஸ் மதுரோ மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது நிகோலஸ் மதுரோ, நான் எந்த தவறும் செய்யவில்லை என கோர்ட்டில் வாதிட்டார். மேலும், தற்போது வரை நான் தான் வெனிசுலா அதிபர் எனவும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையில் வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
மரவள்ளி கிழங்குக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ராமேசுவரம் - தாம்பரம் சிறப்பு ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
கூட்டணி நிலைப்பாடு குறித்து ஓ.பன்னீர்செல்வம் கூறியது என்ன.?
தகவல் தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கும் தமிழ்நாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
பாமக சார்பில் கூட்டணி பேச அன்புமணிக்கு தகுதியில்லை - ராமதாஸ்
ஆஷஸ் கடைசி டெஸ்ட்: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி
ஆஷஸ் கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணிக்கு 160 ரன்கள் வெற்றி இலக்கு
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி இன்று அறிவிப்பு
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
