தகவல் தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கும் தமிழ்நாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

  தினத்தந்தி
தகவல் தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கும் தமிழ்நாடு: முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை, சென்னை நம்தம்பாக்கத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல நிறுவனங்கள் சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது; ”நாம் ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்த மாநாட்டை தொடங்கினோம். தற்போது இந்த மாநாடு நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது பெருமையாக உள்ளது. மற்ற மாநிலங்களை விட தொழில்நுட்பத்துறையில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. தொழில்நுட்பத்துறையில் நாம் இந்த நிலையில் இருப்பதற்கு காரணம் கலைஞர். தமிழ்நாட்டின் ஐ.டி.பாலிசியை கொண்டுவந்தவர் கலைஞர். தமிழ்நாட்டின் மைய அச்சு, தகவல் தொழில்நுட்பம். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் முக்கிய அங்கமாக இந்த மாநாடு அமைந்துள்ளது. தகவல் தொழில்நுட்பத்தை சமூக முன்னேற்றத்திற்கான கருவியாக பார்க்க வேண்டும். எல்லா துறைகளும் ஒரே இலக்கில் செல்கின்றன. அறிவியல் அணுகுமுறைகளை தமிழ்நாடு கையாளுகிறது. தொழில்நுட்பம் எல்லோரையும் சமமாக சென்றடைய வேண்டும். புதுயுகத் தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. உலகளாவிய திறன் மையத்தின் தலைநகராக தமிழ்நாடு மாறிவருகிறது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. 32 மாவட்டங்களில் மென் பொருள் ஏற்றுமதி நடக்கிறது என்று ஒன்றிய அரசு சொல்கிறது, ஒன்றிய| அரசு சொல்லும் இந்த தரவு தான் திராவிட மாடல்.” இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை