நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!

  தினத்தந்தி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!

ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநிலம் கோயில்கேரா பகுதியில் குந்த்ரா என்பவர் வனப்பகுதிக்குள் மரத்தால் அமைக்கப்பட்ட வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, 3 மகள்கள் உண்டு. இந்த நிலையில், நள்ளிரவில் இவரது வீட்டுக்குள் காட்டு யானை ஒன்று புகுந்தது. அந்த யானை, குந்த்ரா மற்றும் அவரது இரு மகள்களை மிதித்து கொன்றது. தாய், யானையின் தாக்குதலில் இருந்து தப்பிவிட்டார். மற்றொரு மகள் யானை தாக்கியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யானை தாக்கி தந்தை, இரு மகள்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களில் காட்டு யானைகள் தாக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதால், அந்தப் பகுதி மக்கள் அச்சத்துடனே வசித்து வருகின்றனர்.

மூலக்கதை