ரெயில்வே பணிமனையில் இருந்து வந்த போது தடம் புரண்ட முத்துநகர் எக்ஸ்பிரஸ்

  தினத்தந்தி
ரெயில்வே பணிமனையில் இருந்து வந்த போது தடம் புரண்ட முத்துநகர் எக்ஸ்பிரஸ்

சென்னை, சென்னை சேத்துப்பட்டில் உள்ள ரெயில்வே பணிமனையில் இருந்து நேற்று மாலை முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் எழும்பூர் ரெயில்நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, அந்த ரெயில் திடீரென தடம் புரண்டது. இதைத்தொடர்ந்து, உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டது. ரெயில்வே ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தடம் புரண்ட பெட்டிகள் சிறிது நேரத்திலேயே சரி செய்யப்பட்டு, பாதுகாப்பாக மீண்டும் தண்டவாளத்தில் நிலைநிறுத்தப்பட்டன. இதையடுத்து, அந்த ரெயில் எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு சென்றது. தடம் புரண்டதற்கான காரணம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மூலக்கதை