மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
தேனி, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக இந்த அணை விளங்குகிறது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ததால் வைகை அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்தது. இதைத்தொடர்ந்து அணையில் இருந்து ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட குடிநீர், பாசன தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காகவும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வந்தது. தற்போது அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லை. இதனால் அணைக்கான நீர்வரத்தும் நின்றுபோனது. ஒருபுறம் கூடுதல் தண்ணீர் திறப்பு, மறுபுறம் நீர்வரத்து இல்லாததால் வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 48 அடியாக சரிந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் மதுரை, திண்டுக்கல் மாவட்ட ஒருபோகம் மற்றும் இருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதன்காரணமாக அணையின் நீர்மட்டம் மேலும் சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகமாக சரிந்து வரும் வைகை அணை நீர்மட்டத்தை ஈடுகட்டும் வகையில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தேனி மாவட்டத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது ஆறுதல் அளிக்கும் வகையில் இருந்தாலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அணையின் நீர்மட்டம் கிட்டத்தட்ட 17 அடி குறைவாக உள்ளது. இதனால் இருப்பில் உள்ள தண்ணீரை கொண்டு கோடைகாலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக 5 மாவட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
ஆஷஸ் கடைசி டெஸ்ட்: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி
ஆஷஸ் கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணிக்கு 160 ரன்கள் வெற்றி இலக்கு
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி இன்று அறிவிப்பு
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
