தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை இன்று சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி
சென்னை, தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்திக்க உள்ளார். காலை 11 மணியளவில் கவர்னரை சந்திக்க எடப்பாடி பழனிசாமிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் மற்றும் திமுக அரசுக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவை அடங்கிய மனுவை, இந்த சந்திப்பின் போது எடப்பாடி பழனிசாமி வழங்குவார் என கூறப்படுகிறது. தமிழக சட்டசபை வரும் 20-ஆம் தேதி கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், கவர்னர் உரையுடன் இந்த சட்டசபை கூடுவது வழக்கம். இத்தகைய சூழலில், எடப்பாடி பழனிசாமி தமிழக கவர்னரை சந்திப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த இரண்டு தினங்களாக தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அமித்ஷாவை அதிமுக மூத்த நிர்வாகிகளில் ஒருவரான எஸ்.பி. வேலுமணி இரண்டு முறை தனியாக சந்தித்து பேசியிருந்தார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது கவர்னரை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சந்திப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி இன்று அறிவிப்பு
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
