பாரதிராஜா உடல்நிலை குறித்து மருத்துவமனை விளக்கம்
சென்னை, ‘16 வயதினிலே’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. தனது முதல் படத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து படம் இயக்கியவர். தொடர்ந்து பல படங்களை இயக்கிய பாரதிராஜா, ராதிகா, ராதா, கார்த்திக் உள்ளிட்ட பல முன்னணி நடிகர், நடிகைகளை அறிமுகம் செய்த பெருமையும் பெற்றவர். முதல் மரியாதை, கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை அவர் இயக்கியுள்ளார். பாரதிராஜாவின் ஒரே மகனும் நடிகரும் இயக்குனருமான மனோஜ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் திடீரென காலமானார். மகனின் மரணம் பாரதிராஜாவை மிகுந்த மனவேதனையில் ஆழ்த்தியது. இதனைத் தொடர்ந்து மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் சில மாதங்கள் ஓய்வெடுத்து, சமீபத்தில் சென்னை திரும்பினார். பாரதிராஜா, உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் கடந்த மாதம் 27ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாரதிராஜா குறித்து சமூக வலைதளங்கள் வாயிலாக வதந்தி பரவியது. இதனால், எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில், “இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நிலை சீராக உள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. டாக்டர்களின் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறார். டாக்டர்கள் குழு கண்காணிப்பில் உள்ளார்” என்று கூறப் பட்டுள்ளது.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
மரவள்ளி கிழங்குக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ராமேசுவரம் - தாம்பரம் சிறப்பு ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
கூட்டணி நிலைப்பாடு குறித்து ஓ.பன்னீர்செல்வம் கூறியது என்ன.?
தகவல் தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கும் தமிழ்நாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
பாமக சார்பில் கூட்டணி பேச அன்புமணிக்கு தகுதியில்லை - ராமதாஸ்
