10 கோடி பார்வைகளை கடந்த சிரஞ்சீவி படத்தின் பாடல்

  தினத்தந்தி
10 கோடி பார்வைகளை கடந்த சிரஞ்சீவி படத்தின் பாடல்

பிரபல தெலுங்கு இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள படம் ‘மன சங்கர வர பிரசாத் காரு’. இந்த படம் சிரஞ்சீவியின் 157வது படமாகும். அனில் ரவிபுடி ‘பகவந்த் கேசரி’ திரைப்படத்தின் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை சுஷ்மிதா கொனிடேலாவின் கோல்ட் பாக்ஸ் எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஷைன் ஸ்கிரீன்ஸ் பேனரின் கீழ் சாஹு கரபதி தயாரிக்கிறார். இதில் கேத்தரின் தெரசா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு பீம்ஸ் செசிரோலியோ இசையமைத்துள்ளார். இந்த நிலையில், ‘மன சங்கர வர பிரசாத் காரு’ படத்தின் ‘மீசால பில்லா’ பாடல் 10 கோடி பார்வைகளை கடந்து அசத்தியுள்ளது. இப்பாடலை உதித் நாராயணன், ஸ்வேதா மோகன் பாடியுள்ளனர். இப்படம் வரும் 12ம் தேதி வெளியாகிறது.What a way to end the year❤️‍It's 100MILLION+ VIEWS for #MeesaalaPilla Team #ManaShankarVaraprasadGaru is grateful for making the MEGA GRACE the MOST CELEBRATED SONG OF THE SEASON ❤️‍-- https://t.co/xsaKQuii7w#MSG GRAND RELEASE WORLDWIDE IN THEATERS ON 12th JANUARY. pic.twitter.com/lpMAyDJbbh

மூலக்கதை