அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் - எடப்பாடி பழனிசாமி
சென்னை, கள்ளக்குறிச்சி மாவட்டம் வாழவந்தான்குப்பத்தில் அதிமுக மகளிரணி பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார. அப்போது அவர் உரையாற்றியதாவது:- அதிமுக திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டது திமுக. தமிழ்நாட்டில் அதிமுகவின் திட்டங்களை அடியோடு அழித்துள்ளது.அதிமுக ஆட்சியில் 5 சதவீதம் திட்டங்கள்தான் நிறைவேற்றப்பட்டதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். கள்ளக்குறிச்சி மாவட்டமானதும், அரசு மருத்துவமனை வந்ததும் அதிமுக ஆட்சியில்தான். அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டிய திட்டங்களைத்தான் திமுக தொடக்கி வைக்கிறது.அதிமுக ஆட்சியில் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினோம். அதனை திமுக தடுத்தது. குடிப்பதற்கு கூட தண்ணீரை நிறுத்திய திமுக அரசு தேவையா? மக்கள் சிந்திக்க வேண்டும். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பல உயிர்கள் பறிபோனதற்கு திமுகவே காரணம். ஆளும் கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு. எதிர்க்கட்சியாக இருக்கும்போது மற்றொரு நிலைப்பாடு. இதுதான் திமுக. ஆனால், அதிமுக ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி மக்கள் நலனையே முதன்மையாகக் கருதுகிறது. அண்ணா பல்கலைக் கழக விவகாரத்தில் இன்று வரை முடிவு கிடைக்கவில்லை. திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. சிறுமிகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது. வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி இன்று அறிவிப்பு
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
