டாஸ்மாக் கடைகளில் காலிப் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் நாளை முதல் அமல்
சென்னை, சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலிப் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் நாளை (ஜன. 06) முதல் அமலுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்கள் செய்தி தொடர்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், டாஸ்மாக் லிட், சென்னை (வடக்கு, தெற்கு, மத்தியம்) மாவட்டத்தில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் 06-01-2026 முதல் அமல்படத்தப்பட உள்ளது. வாடிக்கையாளர்கள் மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களை பொது வெளியில் வீசுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அவற்றை மதுபானக் கடைகளிலேயே திரும்பப் பெறும் திட்டத்தின்படி, மதுபாட்டில்களை வாங்கும் போது மதுபாட்டில் ஒன்றுக்கு ரூ.10/-கூடுதலாகப் பெற்று மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களைத் திரும்ப அதே மதுபான விற்பனைக் கடையில் ஒப்படைக்கும் போது ஏற்கனவே செலுத்திய ரூ.10/-ஐ திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தின் நோக்கம், காலி மதுபாட்டில்களை பொது வெளியில் வீசி சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுப்பதாகும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் காலிப் பாட்டிலை கொடுத்து ரூ.10 பெற்றுக்கொள்ளும் முறை நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதற்கு டாஸ்மாக் விற்பனையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், டாஸ்மாக் கடைகளில் காலிப் பாட்டில்களை சேகரிக்க, புதிய நபர்கள் வேண்டும், ஏற்கெனவே தங்களுக்கு வேலைப்பளு அதிகம் உள்ளதால் தங்களால் அவற்றை செய்ய முடியாது என்று விற்பனையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி இன்று அறிவிப்பு
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
