டெல்லி: நட்சத்திர ஓட்டலின் மாடியில் இருந்து குதித்து முதியவர் தற்கொலை

  தினத்தந்தி
டெல்லி: நட்சத்திர ஓட்டலின் மாடியில் இருந்து குதித்து முதியவர் தற்கொலை

டெல்லி,தலைநகர் டெல்லியின் ஜன்பாத் பகுதியில் பிரபல நட்சத்திர ஒட்டல் உள்ளது. இந்த நட்சத்திர ஓட்டலில் உள்நாட்டினர், வெளிநாட்டினர் என பலர் தங்கியுள்ளனர். இந்நிலையில், இந்த ஓட்டலின் மாடியில் இருந்து கீழே குதித்து முதியவர் இன்று தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் தற்கொலை செய்துகொண்ட முதியவர் பர்வீந்தர் சிங் (வயது 50) என்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து, ஓட்டல் மாடியில் இருந்து குதித்து பர்வீந்தர் சிங் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை