2036 ஒலிம்பிக்கை நடத்துவதற்கான முயற்சியில் இந்தியா முழுவீச்சில் தயாராகி வருகிறது: பிரதமர் மோடி
வாரணாசி, உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் 72-வது தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி வழியே கலந்து கொண்டு இன்று உரையாற்றினார். அப்போது அவர் 2036-ம் ஆண்டு நடைபெற கூடிய ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான முயற்சியில் இந்தியா முழுவீச்சில் தயாராகி வருகிறது என்றார். கடந்த தசாப்தத்தில், பிபா 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை, ஆக்கி உலகக்கோப்பை மற்றும் பல்வேறு சதுரங்க போட்டிகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகள் பல்வேறு நகரங்களில் நடந்துள்ளன. இதனை நீங்கள் கவனித்திருக்கலாம். 2030 காமன்வெல்த் போட்டிகளும் இந்தியாவில் நடத்த முடிவாகி உள்ளன. தற்போது இந்தியா, 2036 ஒலிம்பிக் போட்டிகளை எடுத்து நடத்த முழு வீச்சில் தயாராகி வருகிறது என்றார். 2036 கோடை கால ஒலிம்பிக் போட்டிகளை, ரூ.34,700 கோடி முதல் ரூ.64 ஆயிரம் கோடி வரையிலான நிதி ஒதுக்கீட்டு உதவியுடன் ஆமதாபாத் நகரில் நடத்துவதற்கான திட்டம் தீட்டப்பட்டு உள்ளது. இரட்டை நகர வளர்ச்சியுடன் காந்திநகரையும் சேர்த்து உள்ளடக்கிய இந்த திட்டத்தின்படி, உலக தரம் வாய்ந்த வசதிகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்காக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் அதிகாரிகள் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
த.வெ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? - தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் விளக்கம்
தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது: செல்வப்பெருந்தகை
அநீதி ஆட்சியாளர்களை விரட்டுவதற்கான துணிச்சலை வீரமங்கை வழங்கட்டும்: அன்புமணி புகழாரம்
உதகை மலை ரெயில் சேவை 2-வது நாளாக ரத்து
மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி இன்று அறிவிப்பு
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
