ஆந்திரா: ரெயில் முன் பாய்ந்து முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை

  தினத்தந்தி
ஆந்திரா: ரெயில் முன் பாய்ந்து முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை

அமராவதி,ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் கஞ்ச்வாகா பகுதியை சேர்ந்தவர் வெங்கட ரமணா (வயது 64). இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி பின்னர் பணி ஓய்வு பெற்றார். ஓய்வுபெற்றப்பின் விசாகப்பட்டினத்தில் உள்ள இரும்பு ஆலையில் வேலை செய்தார். பின்னர், கஞ்ச்வாகா பகுதியில் சூப்பர் மார்க்கெட் தொடங்கி தொழில் நடத்தி வந்தார். இந்நிலையில், சூப்பர் மார்க்கெட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தொழில் நஷ்டத்தால் வெங்கட ரமணாவுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சல் அடைந்த வெங்கட ரமணா இன்று துவாடா பகுதியில் உள்ள ரெயில் நிலைய பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு ரெயில் நிலையம் அருகே தண்டவாள பகுதிக்கு சென்ற வெங்கட ரமணா அப்போது தண்டவாளத்தில் பெங்களூரு சென்றுகொண்டிருந்த ரெயில் முன் பாய்ந்தார். இதில், வெங்கட ரமணா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், வெங்கட ரமணாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை