பகுதிநேர வேலை தருவதாக கூறி ரூ.5.7 லட்சம் மோசடி - சைபர் கிரைம் போலீசார் விசாரணை

  தினத்தந்தி
பகுதிநேர வேலை தருவதாக கூறி ரூ.5.7 லட்சம் மோசடி  சைபர் கிரைம் போலீசார் விசாரணை

புதுச்சேரி சேலியமேடு பகுதியை சேர்ந்த நபரின் செல்போனில் டெலிகிராம் செயலிக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. இதில் வீட்டில் இருந்தபடி பகுதிநேர வேலை செய்து அதிகமாக சம்பாதிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. இதனை நம்பி அவர் தனது விவரங்களை சமர்ப்பித்தார். பகுதிநேர வேலையின்போது அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடித்தவுடன் அவரின் வங்கி கணக்கில் கணிசமான ஒரு தொகை வரவு வைக்கப்பட்டது. பின்னர் அவர் பணியில் தொடர வேண்டும் என்றால் முதலீடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனை நம்பி அவர் பல்வேறு தவணைகளாக ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் செலுத்தினார். அதன்பின்னர் அவருக்கு பணிகள் கொடுக்காமல் இணைப்பை துண்டித்தனர். இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை