புதையல் கிடைக்கும் ஆசையில்... குழந்தையை தத்தெடுத்து நரபலி கொடுக்க முயன்ற கொடூர தம்பதி
பெங்களூரு,கர்நாடகாவின் பெங்களூரு மாவட்டத்தின் ஹோஸ்கோட் நகரில் சுலிபெள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் சையது இம்ரான். சில மாதங்களுக்கு முன் புலம்பெயர் தொழிலாளியிடம் இருந்து ஆண் குழந்தையை இம்ரானும், அவருடைய மனைவியும் தத்தெடுத்தனர். எனினும், சட்டப்படி அது மேற்கொள்ளப்படவில்லை. போலியான பிறப்பு சான்றிதழுடன், குழந்தையின் உண்மையான தந்தையுடன் ஒப்பந்தம் ஒன்றும் போட்டு கொண்டனர். இந்நிலையில், பவுர்ணமி நாளான நேற்று இரவு, குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்ணுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், இம்ரானின் வீட்டில் ஒரு வயது குழந்தையை நரபலி கொடுக்க திட்டமிட்டு உள்ளனர் என மர்ம நபர் பேசியுள்ளார். உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என கூறி தொடர்பை துண்டித்து விட்டார். உடனடியாக மாவட்ட குழந்தை பாதுகாப்பு பிரிவு, குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண் பிரிவின் அதிகாரிகள் இம்ரானின் வீட்டை அலசி, தேடி கண்டறிந்தனர். அந்த வீட்டின் ஒரு அறையில், சிறிய குழி ஒன்று தோண்டப்பட்டு இருந்தது. சடங்கு செய்வதற்காக ஊதுபத்தி, மலர்கள் மற்றும் பிற பொருட்கள் இருந்தன. குழந்தையை மீட்டு, பாதுகாப்பாக கொண்டு சென்றனர். புதையல் கிடைக்கும் ஆசையில் அவர்கள் குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற கொடூரம் தெரிய வந்தது. இதுபற்றி குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நல குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சுலிபெள்ளி கிராம பகுதியை சேர்ந்த மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
த.வெ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? - தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் விளக்கம்
தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது: செல்வப்பெருந்தகை
அநீதி ஆட்சியாளர்களை விரட்டுவதற்கான துணிச்சலை வீரமங்கை வழங்கட்டும்: அன்புமணி புகழாரம்
உதகை மலை ரெயில் சேவை 2-வது நாளாக ரத்து
மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி இன்று அறிவிப்பு
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
