டிஜிட்டல் கைது: மோசடி கும்பலிடம் ரூ. 7 கோடியை இழந்த முதியவர்
ஐதராபாத்,தெலுங்கானா மாநிலம் ஐதராபத்தை சேர்ந்த 81 வயது முதியவருக்கு கடந்த அக்டோபர் 27ம் தேதி செல்போனில் மர்ம நபர் தொடர்பு கொண்டுள்ளார். அதில், தாங்கள் மும்பை போலீசில் இருந்து பேசுவதாகவும் தாய்லாந்தில் இருந்து மும்பைக்கு உங்கள் பெயரில் பார்சல் வந்துள்ளதாகவும் முதியவரிடம் கூறியுள்ளனர். அந்த பார்சலில் போதைப்பொருள் வந்துள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும், போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணைக்கு ஒப்புதல் அளிக்கவில்லையென்றால் சிறை செல்ல நேரிடும் என மிரட்டியுள்ளனர். மேலும், விசாரணைக்காக தங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அனுப்பும்படி கூறியுள்ளனர். இதை நம்பிய முதியவர் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ. 7 கோடி பணத்தை அந்த மோசடி கும்பல் கூறிய வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். இது குறித்து வேறு யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டியுள்ளனர். அதேவேளை, மேலும் ரூ. 1 கோடி வங்கி கணக்கில் செலுத்தும்படி மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த முதியவர் தான் டிஜிட்டல் கைது முறையில் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து உடனடியாக ஐதராபாத் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முதியவரிடம் ரூ. 7 கோடி மோசடி செய்த டிஜிட்டல் மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
த.வெ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? - தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் விளக்கம்
தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது: செல்வப்பெருந்தகை
அநீதி ஆட்சியாளர்களை விரட்டுவதற்கான துணிச்சலை வீரமங்கை வழங்கட்டும்: அன்புமணி புகழாரம்
உதகை மலை ரெயில் சேவை 2-வது நாளாக ரத்து
மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி இன்று அறிவிப்பு
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
