பள்ளி விடுதியில் 6ம் வகுப்பு மாணவி சடலமாக மீட்பு - அதிர்ச்சி சம்பவம்

  தினத்தந்தி
பள்ளி விடுதியில் 6ம் வகுப்பு மாணவி சடலமாக மீட்பு  அதிர்ச்சி சம்பவம்

மும்பை,மராட்டிய மாநிலம் லாத்தூர் மாவட்டம் தஹா பகுதியில் உள்ள பள்ளியில் 12வயது சிறுமி 6ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமி பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில், சிறுமி இன்று காலை பள்ளி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதேவேளை, விடுதி ஊழியர் சிறுமியை அடித்துக்கொன்றுள்ளதாக சிறுமியின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை