காதலனை வசியம் செய்து தருவதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி
பெங்களூரு,பெங்களூரு ஆடுகோடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர், அதேபகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்தார். இந்த நிலையில், அந்த இளம்பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்ப பிரச்சினைகளுக்கு தீர்வு, மாந்திரீகம் மூலம் வசியம் செய்தல் போன்ற விளம்பரத்தை பார்த்தார். இதையடுத்து இளம்பெண் தனது காதலனை வசியம் செய்து மயக்கி தனது வலையில் சிக்க வைக்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்து தகவல்களை தெரிந்து கொள்ள நினைத்த இளம்பெண் அந்த விளம்பரத்தில் இருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார். மறுமுனையில், சந்திரசேகர் சுகத் குரு என்ற சாமியார் அந்த பெண்ணிடம் பேசினார். அப்போது அவர் தனது காதலனை மாந்திரீகம் மூலம் வசியம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனை கேட்ட சாமியார், காதலனை வசியம் செய்வதற்கு பூஜைகள் செய்ய வேண்டும் என்றும், அதற்கு பணம் அனுப்ப வேண்டும் என்றும் இளம்பெண்ணிடம் கூறினார். இதனை நம்பிய இளம்பெண், பூஜைகளுக்காக சாமியார் கேட்கும் போதெல்லாம் பல்வேறு தவணைகளாக அவர் கூறிய வங்கி கணக்குக்கு ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் வரை அனுப்பினார். இந்த நிலையில், சாமியார் நேற்று முன்தினம் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு காதலனை மயக்க சிறப்பு பூஜை செய்ய வேண்டும் அதற்கு ரூ.4 லட்சம் வரை செலவாகும் என்று கூறினார். அப்போது சாமியார் தன்னிடம் இருந்து பணத்தை பெற்று கொண்டு ஏமாற்றி வருவது இளம்பெண்ணுக்கு தெரியவந்தது. இதையடுத்து போலி சாமியாரிடம் தான் அனுப்பிய பணத்தை இளம்பெண் திரும்ப கேட்டார். ஆனால், அவர் பணத்தை திரும்ப கொடுக்க மறுத்துள்ளார். மேலும் இளம்பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் ஆடுகோடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலி சாமியாரை வலைவீசி தேடி வருகின்றனர்.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
த.வெ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? - தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் விளக்கம்
தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது: செல்வப்பெருந்தகை
அநீதி ஆட்சியாளர்களை விரட்டுவதற்கான துணிச்சலை வீரமங்கை வழங்கட்டும்: அன்புமணி புகழாரம்
உதகை மலை ரெயில் சேவை 2-வது நாளாக ரத்து
மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி இன்று அறிவிப்பு
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
