நெல்லை: காட்டு யானைகள் அட்டகாசத்தால் தென்னை, நெற்பயிர்கள் சேதம்
நெல்லை, நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருகே மடத்தானை பகுதியில் நள்ளிரவில் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டமாக புகுந்தன. அப்போது அங்குள்ள வயல்பகுதியில் உள்ள நெற்பயிர்களை சேதப்படுத்தியதுடன், அருகிலுள்ள தோட்டங்களுக்குள் புகுந்து தென்னை மரங்களையும் சேதப்படுத்தி விட்டு வனப்பகுதிக்குள் திரும்பி சென்றது. இதையடுத்து நேற்று காலை தோட்டத்துக்கு சென்ற விவசாயிகள் சேதமடைந்த பயிர்கள், தென்னை மரங்களை பார்த்து வேதனை அடைந்தனர். கடந்த சில நாட்களாகவே யானைகள் கூட்டம் அந்த பகுதிகளில் சுற்றித்திரிவதால் இரவு நேரங்களில் வயல்களுக்கு செல்லவும், அங்கு தங்கவும் அச்சமடைந்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘யானைகள் அட்டகாசம் கடந்த சில நாட்களாகவே அதிகரித்து காணப்படுகிறது. இதனால் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே வனத்துறை சார்பில் சோலார் மின்வேலி அமைத்தும், அகழிகள் வெட்டப்பட்டு இருந்தாலும் யானைகள் அவற்றை கடந்து விளைநிலங்களுக்குள் புகுந்து சேதம் விளைவிக்கின்றன. இதனால் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். எனவே மலையடிவார கிராமங்களில் கூட்டமாக சுற்றித்திரியும் யானைகளை காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
