புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு.!
சேலம், புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் பூக்களின்விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சேலம் கடைவீதியில் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ குண்டுமல்லி நேற்று ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே பனிப்பொழிவு காரணமாக குண்டுமல்லி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மார்க்கெட்டிற்கு குறைந்த அளவே குண்டு மல்லி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. ஒருசிலர் குண்டு மல்லி விலையை கேட்டு வியப்படைந்தனர். இதேபோல், ஒரு கிலோ சன்னமல்லி ரூ.1,200, ஜாதி மல்லி ரூ.720, கனகாம்பரம் ரூ.1,000, முல்லை ரூ.1,200, சிறிய சிவப்பு ரோஜா ரூ.100, பன்னீர் ரோஸ் ரூ.160, சம்பங்கி ரூ.160, சிவப்பு அரளி ரூ.240, சாமந்தி ரூ.50 முதல் ரூ.100, காக்கட்டான் ரூ.200, ஏற்காடு மலைக்காக்கட்டான் ரூ.120, நந்தியாவட்டம் ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டு மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லி ரூ.2 ஆயிரத்துக்கும், முல்லை ரூ.1,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திருப்பூரில் மல்லிகை ரூ.2,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையிலும் பூக்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது. பூக்களின் விலை உயர்வை பொருட்படுத்தாமல் சில்லறை வியாபாரிகளும், பொதுமக்களும் தேவைக்கு ஏற்ப பூக்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
