முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த திமுகவினர்
சென்னை, உலகம் முழுவதும் புத்தாண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். புத்தாண்டை முன்னிட்டு பிரபல கோவில்களில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மேலும், புத்தாண்டை கொண்டாடும் வகையில், புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் மக்கள் குவிந்து வருகின்றனர். இவ்வாறு, அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியடையும் வகையில் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அமைச்சர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, ரகுபதி, பெரியகருப்பன், மா.சுப்பிரமணியன் , சேகர்பாபு, நாசர், அன்பில்மகேஷ், டி.ஆர்.பி.ராஜா, செந்தில்பாலாஜி உள்ளிட்ட அமைச்சர்களும், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் ஆகியோரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நினைவுப்பரிசு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அத்துடன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக, அவருடைய ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
