குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
திருச்சி தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருவனந்தபுரம் கோட்டத்தில் இந்த மாதம் (ஜனவரி) பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- * குருவாயூரில் இருந்து சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16128), வருகிற 7,8,9,10, 12-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை மற்றும் 26,27 ஆகிய தேதிகளில் கோட்டையம் மாற்றுப்பாதை வழியாக எழும்பூர் வந்தடையும். எர்ணாகுளம், ஆலப்புழா போன்ற ரெயில் நிலையம் செல்லாது. * சென்னை சென்டிரலில் இருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் சென்டிரல் செல்லும் ஏ.சி. எக்ஸ்பிரஸ் ரெயில் (22207), வருகிற 9,16,23 ஆகிய தேதிகளில் கோட்டயம் மாற்றுப்பாதை வழியாக திருவனந்தபுரம் செல்லும். எர்ணாகும், ஆலப்புழா செல்லாது. தாமதமாக செல்லும் * சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16127) வருகிற 3, 10 ஆகிய தேதிகளில் 30 நிமிடம் தாமதமாக குருவாயூர் சென்றடையும். இதே ரெயில் 5, 7, 14 ஆகிய தேதிகளில் 1 மணி நேரம் 30 நிமிடம் தாமதமாகவும், 8, 12 ஆகிய தேதிகளில் 1 மணி நேரம் 50 நிமிடம் தாமதமாகவும், 9, 13 ஆகிய தேதிகளில் 1 மணி நேரம் தாமதமாகவும், 16-ந்தேதி 20 நிமிடம் தாமதமாகவும், 20, 23, 26 ஆகிய தேதிகளில் 2 மணி நேரம் 15 நிமிடம் தாமதமாகவும் குருவாயூர் சென்றடையும். ரெயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் ரெயில்வே அதிகாரபூர்வ இணையதளம், என்.டி.இ.எஸ். செயலி மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மதுரை கோட்டத்தில்... தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக குருவாயூரில் இருந்து ஜனவரி 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை (6, 12, 13, 14, 15, 19, 20, 25, 26, 27 தவிர) இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16128) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். மேலும், இந்த ரெயில், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை ஆகிய ரெயில் நிலையங்களில் நிற்காது. அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டையில் கூடுதலாக நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
