ராமதாஸ் இல்லாத பாமக பிணத்துக்கு சமம்: ஸ்ரீகாந்தி கடும் தாக்கு

  தினத்தந்தி
ராமதாஸ் இல்லாத பாமக பிணத்துக்கு சமம்: ஸ்ரீகாந்தி கடும் தாக்கு

சேலம், சேலத்தில் ராமதாஸ் தலைமையில் இன்று பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பாமக செயல் தலைவரும், ராமதாசின் மகளுமான ஸ்ரீகாந்தி கலந்துகொண்டு பேசியதாவது; எம்.பி. பதவியும், அமைச்சர் பதவியும் அன்புமணிக்கு ராமதாஸ் போட்ட பிச்சை. பாமகவை கண்டுகொள்ளாமல் நான்தான் தலைவர் என்று சொன்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா? அன்புமணி செய்தது பச்சை துரோகம். ராமதாஸ் இல்லாத பாமக பிணத்துக்கு சமம். பாமக இயக்கத்தை களவாடிவிட்டு, யாரின் உரிமையை மீட்க செல்கிறீர்கள்? ஐயாவை நீதிமன்றம் வரை கொண்டு சென்ற நீங்கள், மக்களை ஒன்றிணைக்கிறேன் எனக்கூறுவது மாபெரும் கேளிக்கூத்து. திமுக கைக்கூலி, திமுக அடிமை என மேடைக்கு மேடை முழங்குகின்றனர். அவர்கள் ஆர்.எஸ்.எஸ்.-ன் அடிமைகள். நம்முடன் ஐயா ராமதாஸ் இருக்கிறார். ஐயாவின் ஆட்டத்தை இனிதான் பார்க்கப்போகிறீர்கள். 2026 தேர்தலில் பாமக ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக மாற வேண்டும். ஆட்சி மாற்றம் வேண்டும். 2026 தேர்தல் வியூகத்தை ஐயா வகுத்துவிட்டார். யாருடன் கூட்டணி, யாருக்கு சீட் என ஐயாவுக்கு தெரியும். 25 எம்.எல்.ஏக்களுடன் சட்டப்பேரவைக்கு செல்வோம். ஆட்சியில் பங்கு பெறுவோம்.” இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை