தமிழ்நாடு அரசின் அனைத்து துறை மாற்றுத்திறனாளிகளுக்கு பணிநிரந்தரம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சென்னை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் ஏராளமான மாற்று திறனாளிகள் தொகுப்பூதியம் மதிப்பூதியம், சிறப்பூதியம், தினக்கூலி போன்ற முறைகளில் தற்காலி அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு, நீண்ட காலமாக பணியாற்றிவருகிறார்கள். அந்த மாற்றுத் திறனாளி பணியாளர்களுக்கு, எந்த விதமான சலுகைகளும், உரிமைகளும் வழங்கப்படவில்லை. நிரந்தர பணியாளருக்கான இணையான ஊதியமும் வழங்கப்படவில்லை. தமிழ்நாடு அரசின், அரசாணை எண் 151 அடிப்படையில் அரசு பணியில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றக்கூடிய அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் எந்தவித நிபந்தனையும் இன்றி பணி நிரந்தரப் படுத்திட வேண்டும். அந்த அரசாணை அடிப்படையில் பணி நிரந்தரம் கோரி, தமிழ்நாடு அனைத்து துறை மாற்றுத்திறனாளி பணியாளர்கள் கூட்டமைப்பினர், தங்கள் குடும்பத்தினருடன் தொடர் அறவழி காத்திருப்புப் போராட்டத்தை சென்னையில், இன்று முதல் (29.12.2025) தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளி ஆணையரகத்தில் மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாடு அரசு அவர்களை அழைத்துப் பேசி, அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
