திருவாரூர்: வீட்டில் இருந்தே பணம் சம்பாதிக்கலாம் என ஏமாற்றி பெண்ணிடம் ரூ.14 லட்சம் மோசடி

  தினத்தந்தி
திருவாரூர்: வீட்டில் இருந்தே பணம் சம்பாதிக்கலாம் என ஏமாற்றி பெண்ணிடம் ரூ.14 லட்சம் மோசடி

திருவாரூர், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த பீர் முகமது வெள்ளிநாட்டில் வேலை செய்யும் நிலையில், அவரது மனைவியின் வாட்ஸ்அப் எண்ணுக்கு புதிய எண்ணில் இருந்து, வீட்டில் இருந்தே லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க வேலைவாய்ப்பு உள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது, முதலில் 2 லட்சம் ரூபாய் பணம் முதலீடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். அதிக பணத்தை முதலீடு செய்தால், பல மடங்கு அதிக வருமானம் கிடைக்கும் என உத்தரவாதம் அளித்துள்ளனர். இதனை நம்பி அந்த பெண் மொத்தமாக 14 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்தியுள்ளார். ஆனால் எதிர்பார்த்தது போல் அவருக்கு வருமானம் எதுவும் கிடைக்கவில்லை. இறுதியில், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண் இது குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை