சீர்காழி: அன்னை அஜ்மத் பீவி தர்ஹா கந்தூரி விழா கொடியேற்றம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மேலச்சாலை கிராமத்தில் அன்னை அஜ்மத் பீவி தர்ஹா அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அவ்வகையில், 85வது ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. கொடியேற்றத்தைத் தொடர்ந்து ஒரு வார காலம் சிறப்பு பாத்தியாக்கள் ஓதப்பட்டு முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் வருகிற 27-ம் தேதி சனிக்கிழமை இரவு நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை அன்று விடியற்காலை 4 மணிக்கு சந்தனம் பூசும் வைபவம் நடைபெறும். கொடியேற்ற நிகழ்ச்சியில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் சீடர்கள் பங்கேற்றனர். மதச்சார்பற்று அனைத்து மதத்தினரும் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
