விழுப்புரம்: ஸ்கூட்டர் மீது கார் மோதி விபத்து - கல்லூரி மாணவி பலி

  தினத்தந்தி
விழுப்புரம்: ஸ்கூட்டர் மீது கார் மோதி விபத்து  கல்லூரி மாணவி பலி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி இன்று தனது நண்பருடன் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தார். கல்லூரி மாணவி ஸ்கூட்டரின் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். இந்நிலையில், செண்டூர் என்ற பகுதியில் சென்றபோது வேகமாக வந்த கார், ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த விபத்தில் ஸ்கூட்டரில் பயணித்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயமடைந்த கல்லூரி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மாணவியின் நண்பருக்கு படுகாயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் கார் தலைகீழாக கவிழ்ந்ததில் அதில் இருந்தவர்களும் காயமடைந்தனர். இதையடுத்து, காயமடைந்தவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை