பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு- விஜய் முன்னிலையில் ஆற்காடு நவாப் பேச்சு
சென்னை, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தவெக சார்பில் நடைபெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டார். இந்தநிலையில் தவெகவின் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில், அக்கட்சித் தலைவர் விஜய் முன்னிலையில் ஆற்காடு நவாப் முகமது அலி கலந்து கொண்டு பேசியதாவது:- வணக்கம். நான் முஸ்லிம் மதத்தை பின்பற்றுகிறேன். ஆனால் எனது மகன் பெயர் ஜீசஸ். மூத்த மகன் பெயர் ஆப்ரகாம். நாங்களும் மேன்மை தாங்கிய இயேசு கிறிஸ்து, அன்னை மேரி மீது நம்பிக்கை வைத்து இருக்கிறோம். அப்படி இல்லையெனில் நாங்கள் முஸ்லிமே அல்ல. நான் இயேசு கிறிஸ்துவை நம்பவில்லை எனில் நான் முஸ்லிமே கிடையாது. நான் இயேசு கிறிஸ்து மீது நம்பிக்கை வைக்க வேண்டும்; அது தான் என்னை உண்மையான முஸ்லிம் ஆக்குகிறது.ஒற்றுமைக்கு சிறந்த முன்னுதாரணமான மாநிலமாகவும், அமைதியான மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது. பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்கிறது என்றார். தவெக தலைவர் விஜய் தொடர்ந்து திமுக அரசை விமர்சனம் செய்து வரும் நிலையில்,ஆற்காடு நவாப்பின் இந்த பேச்சு சமூகவலைதளங்களில் பேசும் பொருளாகி உள்ளது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
