‘இந்திய வானில் இன்னொரு வெற்றித் திலகம்'- கவிஞர் வைரமுத்து பெருமிதம்
சென்னை, இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் சி.எம்.எஸ்-03 உடன் எல்.வி.எம்.-3 எம்-5 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது. இதையொட்டி, கவிஞர் வைரமுத்து தனது ‘எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- "எழுந்துநின்று கைதட்டு இந்தியாவே! குமரிக் கடலின் அலையாடல்களும் இமயத்து நதியின் உரையாடல்களும் இஸ்ரோவை வாழ்த்துக சி.எம்.எஸ் – 03 இந்தியாவின் விலாசம் எழுதிவிட்டது விண்வெளியில் 4410கிலோ கனஎடை கொண்ட கோள்களையும் விண்ணில் ஏவ முடியுமென இந்தியாவின் சொந்தக்கால்கள் சொல்லுகின்றன இந்திய வானம் தன் நெற்றியில் இன்னொரு வெற்றித் திலகம் இட்டுக்கொண்டுவிட்டது பூமியின் மூன்றிலொரு பங்கைக் கண்காணிக்கும் இந்தக் கடவுளின் கண்கள் இமைப்பதும் இல்லை; தூங்குவதும் இல்லை இன்று உலக நீரோட்டத்தோடு இந்தியா நாளை இந்திய நீரோட்டத்தோடு உலகம்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
