எனக்கு சினிமாவை தவிர வேறு எதுவும் தெரியாது- நடிகை சுவாசிகா

  தினத்தந்தி
எனக்கு சினிமாவை தவிர வேறு எதுவும் தெரியாது நடிகை சுவாசிகா

‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் சுவாசிகா. அதனை தொடர்ந்து 'மாமன்' படத்தில் நடிகர் சூரிக்கு அக்காவாக நடித்திருந்தார். மேலும், சூர்யாவுடன் 'கருப்பு' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வரும் சுவாசிகா அளித்த பேட்டியில், நான் 9-ம் வகுப்பில் இருந்து நடித்து வருகிறேன். சினிமாவை தவிர வேறு எதுவும் தெரியாது. தொலைதூர கல்வி மூலம் பிளஸ்-2 படிப்பை முடித்தேன். தொடர்ந்து நடனத்தில் டிப்ளமோ முடித்தேன். எனக்கு இன்னும் ஆங்கிலத்தில் பேசுவதில் சிரமம் உள்ளது. கலைஞர்களுக்கு மொழி ஒரு பொருட்டல்ல. விஜய் சேதுபதி, கங்கனா ரணாவத் நினைவு எனக்கு வருகிறது. கங்கனா முதலில் இந்தியில் மட்டுமே பேசுவார். பின்னர் ஆங்கிலத்தில் பேச தொடங்கினார். நானும் மெதுவாக ஆங்கிலத்தை கற்றுக் கொள்வேன். மூத்த நடிகர் ஒருவர் கதாநாயகிக்கு தேவையான அம்சங்கள் என்னிடம் இல்லை. எனக்கு முகப்பரு இருப்பதாக கூறினார். நான் இந்த முகப்பரு, வறண்ட சருமம் இந்த மூக்குடன் தான் நடித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை