'ஸ்பைடர்மேன்- பிராண்ட் நியூ டே' படப்பிடிப்பின் போது நடிகர் டாம் ஹாலண்டிற்கு தலையில் காயம்

  தினத்தந்தி
ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே படப்பிடிப்பின் போது நடிகர் டாம் ஹாலண்டிற்கு தலையில் காயம்

”ஸ்பைடர் மேன்" படங்களில் ஹீரோவாக நடித்து புகழ் பெற்றவர் டாம் ஹாலண்ட். இவர் தற்போது ஸ்பைடர் மேன் படத்தின் 4-வது பாகத்தில் நடித்து வருகிறார். இதற்கு 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' எனப்பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தினை டெஸ்டின் டேனியல் இயக்கி வருகிறார். தற்போது இந்த படத்தின் படிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், படப்பிடிப்பின் போது நடிகர் டாம் ஹாலண்ட்டிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதாவது, ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருக்கும் போது டாம் ஹாலண்டின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அதனால் டாம் ஹாலண்ட் முழுமையாக குணமடைந்த பிறகே மீண்டும் ஸ்பைடர் மேன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று அப்படக்குழு அறிவித்துள்ளது.

மூலக்கதை