அஜித்துக்கு ஜோடியாக நடிச்சா ஏற்றுக்க மாட்டாங்க.. வீரம் படத்தில் மகளாக நடித்த யுவினா பேட்டி

  தினத்தந்தி
அஜித்துக்கு ஜோடியாக நடிச்சா ஏற்றுக்க மாட்டாங்க.. வீரம் படத்தில் மகளாக நடித்த யுவினா பேட்டி

சென்னை, ‘வீரம்’ படத்தில் அஜித்துடன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் யுவினா. தற்போது ‘ரைட்’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கத்தில் நட்டி, அருண்பாண்டியன் நடிப்பில் ‘ரைட்’ படம் உருவாகி இருக்கிறது. படத்தை ஆர்.டி.எஸ்.பிலிம் பேக்டரி சார்பில் திருமால் லட்சுமணன் ஷியாமளா ஆகியோர் தயாரித்து உள்ளனர். வருகிற 26-ந்தேதி படம் திரைக்கு வரும் நிலையில் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் நடிகை யுவினா பேசுகையில், சின்ன குழந்தையாக என்னை ‘வீரம்’ படத்தில் பார்த்திருப்பீர்கள். இப்போது கல்லூரி பெண்ணாக இந்த படத்தில் நடித்துள்ளேன் என பேசினார். தொடர்ந்து யுவினாவிடம் ரஜினியுடன் மீனா குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பிற்காலத்தில் அவருக்கு ஜோடியாகவும் நடித்தார். அதுபோல் ‘வீரம்’ படத்தில் அஜித்துடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த நீங்கள் அவருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா? வேண்டாம் என சொல்வீர்களா? என்ற கேள்விக்கு, காலம் ரொம்ப மாறிடுச்சு நீங்க சொல்றது அந்த காலம். அந்த கேரக்டருக்கு ஏற்றது போல் இருந்ததால் நடித்திருப்பார்கள். இப்போது அதை செய்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? அது இந்த தலைமுறைக்கு சரியாக இருக்காது என கூறினார்.

மூலக்கதை