“திரிஷ்யம் 3” படத்தின் பூஜை புகைப்படங்கள் வெளியீடு

கடந்த 2013-ம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியான படம் 'திரிஷ்யம்'. ரூ.5 கோடி செலவில் தயாரான இப்படம் ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த படம் கமல்ஹாசன், கவுதமி நடிக்க 'பாபநாசம்' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கு, கன்னடம், இந்தி, சீன மொழிகளிலும் வெளியானது. பின்னர் 'திரிஷ்யம்' படத்தின் இரண்டாம் பாகமும் வெளியானது.இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் திரில்லர் கதைக்களத்தில் உருவான இந்த இரண்டு படங்களும் மாபெரும் வெற்றியை பெற்றன. அதனை தொடர்ந்து இயக்குனர் ஜீத்து ஜோசப் இப்படத்தின் மூன்றாம் பாகமான 'திரிஷ்யம் 3' படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். இந்த படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். ‘திரிஷ்யம் 3’ படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. இயக்குநர் ஜீத்து ஜோசப் புதிதாகப் படப்படிப்பு செய்வது போன்ற வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிக்க உள்ள ‘திரிஷ்யம் 3’ படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. படத்தின் பூஜை புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.With your love as our biggest strength, we begin the next chapter of Georgekutty’s journey. #Drishyam3 starts today. pic.twitter.com/049sb4CVWdநாளை டெல்லியில் நடைபெறும் 71-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில், நடிகர் மோகன்லாலுக்கு 2023-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது.
மூலக்கதை
