தனுஷின் “இட்லி கடை” படத்திற்கு “யு” சான்றிதழ்

சென்னை, தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக ‘இட்லி கடை’ உருவாகியுள்ளது. தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். எம்மாதிரியான கதைக்களத்துடன் இப்படம் இருக்கும் என மக்களிடம் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்காக படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 14-ம் தேதி சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்றது. ‘இட்லி கடை’ படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் வெளியானது. கடந்த 20ந் தேதி கோவை புரோஷன் மாலில் ‘இட்லி கடை’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிலையில், ‘இட்லி கடை’ படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது.It’s a Clean U for #IdliKadai #IdliKadai from 1st October, in theatres worldwide ️@dhanushkraja @arunvijayno1 @RedGiantMovies_ @gvprakash @menennithya @aakashbaskaran @thesreyas @wunderbarfilms @saregamasouth @dancersatz @MShenbagamoort3 @kavya_sriram @Kiran10koushik… pic.twitter.com/FS5pdpFZEJ
மூலக்கதை
