திருமணம் எப்போது?- எஸ்.ஜே.சூர்யா சொன்ன சுவாரஸ்ய பதில்

சென்னை, ஏ.எம்.ரத்னம் தயாரித்து எஸ்.ஜே.சூர்யா இயக்கி விஜய் - ஜோதிகா நடிப்பில் 2000-ம் ஆண்டு வெளியாகி பெருவெற்றி கண்ட படம், 'குஷி'. அப்போதே இந்த படம் ரூ.22 கோடி வசூலை குவித்தது. 25 ஆண்டுகளுக்கு பிறகு 'குஷி' படத்தை மீண்டும் ரிலீஸ் செய்யப்போவதாக ஏ.எம்.ரத்னம் அறிவித்துள்ளார். அதன்படி வருகிற 25-ந்தேதி தமிழகம் முழுவதும் படம் ரீ-ரிலீசாகிறது. சென்னையில் நடந்த இதன் படவிழாவில் எஸ்.ஜே.சூர்யா பேசுகையில், ‘குஷி' படத்தின் அடுத்த பாகம் வருமா? என்று கேட்கிறார்கள். ‘குஷி' இறைவன் அமைத்து கொடுத்த படம். அதேபோன்ற நிலை மீண்டும் அமைந்தால் பார்க்கலாம். இப்போது என் கவனம் நடிப்பில் மட்டுமே இருக்கிறது. நான் என்றைக்குமே ஒரு ‘ஸ்டார்' நடிகனாக ஆகவேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். இயக்குனர் ஆனதே என்னை நடிகனாக்கத்தான், என்றார். இதற்கிடையில் 'திருமணம் செய்யாமல் முரட்டுக்காளையாக சுற்றுகிறீர்களே... எப்போதுதான் திருமணம்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு, ‘‘நான் ஒரு சுதந்திர பறவை. அப்படியே இருந்திடுகிறேனே... விட்டுடுங்கள்'', என்று கூறி சிரித்தார் எஸ்.ஜே.சூர்யா.
மூலக்கதை
