“அதிரா” படத்தில் மிரள வைக்கும் எஸ்.ஜே.சூர்யா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

  தினத்தந்தி
“அதிரா” படத்தில் மிரள வைக்கும் எஸ்.ஜே.சூர்யா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

பிரசாந்த் வர்மா தனது புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார். ‘ஓஜி’ படத் தயாரிப்பாளர் டி.வி.வி. தனய்யாவின் மகன் கல்யாண் தாசரியை ஹீரோவாக அறிமுகப்படுத்தி ‘அதீரா’ படம் உருவாகி வருகிறது. பிரசாந்த் வர்மாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சரண் கொப்பிசெட்டி இப்படத்தை இயக்குகிறார். பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாக வரும் இந்தப் படம், சிறந்த விஷுவல்களுடன் உருவாக்கப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.பிரசாந்த் வர்மா, இந்த சூப்பர் ஹீரோ படத்திற்காக ஆர்.கே.டி ஸ்டுடியோஸுடன் இணைந்து பணியாற்றுகிறார். டோலிவுட்டின் முதல் ஜாம்பி ஜானர் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த பிரசாந்த் வர்மா, இந்திய சூப்பர் ஹீரோ படமான `ஹனுமான்` மூலம் ஒரு பெரிய வெற்றியைப் பெற்றார். அதே கனவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் படமாக ‘அதீரா’ வருகிறது. இந்தப் படத்தில் கல்யாண் தாசரி ஹீரோவாக பிரம்மாண்டமாக அறிமுகமாகிறார், எஸ்.ஜே. சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஸ்ரீ சரண் பாகாலா இசையமைக்கிறார். இந்நிலையில், ‘அதிரா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பின்னணியில் எரிமலை வெடிப்பு, தீப்பிழம்புகள், லாவா மற்றும் சாம்பல் வானத்தை மூடுகிறது. அந்த கொந்தளிப்பில் இருந்து எஸ்.ஜே. சூர்யா, காளை போன்ற கொம்புகளுடன், பழங்குடியினர் உடையில், ஒரு கொடூரமான அரக்கனைப் போலத் தோன்றுகிறார். அவருக்கு முன்னால் கல்யாண் தாசரி மண்டியிட்டு, தைரியத்துடன் மேல்நோக்கிப் பார்க்கும் ஒரு சூப்பர் ஹீரோவாகக் காட்சியளிக்கிறார்.When darkness blooms the world, a LIGHTNING of hope emerges ❤️‍Presenting @IamKalyanDasari and @iam_SJSuryah in #ADHIRA ⚡️A New SUPERHERO from #PrasanthVarmaCinematicUniverse Created By @PrasanthVarma An RKD Studios ProductionPresented By RK Duggal Directed By… pic.twitter.com/gDJl9lfy1T

மூலக்கதை