கவுதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்!

நடிகர் கவுதம் கார்த்திக் கடல் படத்தில் அறிமுகமாகி தன் அடுத்தடுத்த படங்களில் மினிமம் பட்ஜெட் நாயகனானார். வை ராஜா வை, ரங்கூன், ஆகஸ்ட் 16 ,1947, பத்து தல உள்ளிட்ட படங்கள் இவருக்கு வெற்றிப்படமாகின. நடிகர் கவுதம் கார்த்திக் கிரைம் திரில்லர் கதையில் உருவாகி வரும் 'ரூட் - ரன்னிங் அவுட் ஆப் டைம்' என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தினை 'நாளைய இயக்குநர் சீசன் 1' மூலம் கவனத்தை ஈர்த்த சூரியபிரதாப் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகர் கவுதம் கார்த்திக்கின் புதிய படத்தின் அப்டேட் கிடைத்துள்ளது. அதாவத, அறிமுக இயக்குனர் சின்னசாமி பொன்னையா புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று கோவில்பட்டியில் தொடங்கியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டியில் துவங்கி தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, பொள்ளாச்சி மற்றும் காஷ்மீர் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலக்கதை
