எட்டாக் கனியாகும் தங்கம்.... ஒரே நாளில் 2-வது முறையாக விலை உயர்வு

  தினத்தந்தி
எட்டாக் கனியாகும் தங்கம்.... ஒரே நாளில் 2வது முறையாக விலை உயர்வு

சென்னை,உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வருகிறது. கடந்த 12-ந்தேதி வரை உயர்ந்து வந்து, பின்னர் குறைந்து, 16-ந்தேதி அதிரடியாக அதிகரித்து ஒரு பவுன் ரூ.82 ஆயிரத்தையும் தாண்டியது. அதற்கு அடுத்த 2 நாட்கள் தொடர்ந்து விலை குறைந்து, ரூ.82 ஆயிரத்துக்கு கீழும் வந்தது. இந்த நிலையில், இன்று காலை தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியது. அதன்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ,82,880-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3,000-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.148-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தங்கம் விலை இன்று ஒரே நாளில் 2-வது முறையாக உயர்ந்துள்ளது. அதன்படி, சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.83.440-க்கும், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10.430-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் ரூ.1,12 அதிகரித்துள்ளது. இதன்மூலம் எழை எளிய மக்களின் எட்டாக் கனியாக தங்கம் இருந்து வருகிறது.

மூலக்கதை