பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு; 24 பேர் பலி

  தினத்தந்தி
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு; 24 பேர் பலி

லாகூர்,பாகிஸ்தான் நாட்டில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகள் பாதுகாப்புப்படையினர், பொதுமக்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த அமைப்புகளை ஒழிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்புப்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணம் கைபர் மாவட்டம் திராக் பள்ளத்தாக்கு பகுதியில் இன்று குண்டு வெடிப்ப்பு சம்பவம் அங்கேறியது. இந்த குண்டு வெடிப்பில் பெண்கள், குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழந்தனர். அதேவேளை, இந்த குண்டு வெடிப்பு சம்பவம் பாகிஸ்தானி தலிபான் பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வரும் கட்டிடம் அருகே நடைபெற்றதாகவும், இதில் 14 பயங்கரவாதிகள் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, குண்டு வெடிப்பு தாக்குதலை நடத்தியது யார்? என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

மூலக்கதை