பவன் கல்யாணின் “ஓஜி” படத்திற்கு “ஏ” சான்றிதழ்

பவர் ஸ்டார் பவன் கல்யாண் அரசியல்வாதியும், தெலுங்கு சினிமாவின் முன்னனி நடிகரும் ஆவார். இவர் தெலுங்கு சினிமாவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். இவர் தற்போது, இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் 'ஓஜி' என்ற படத்தில் நடிக்துள்ளார். ‘ஓஜி’ திரைப்படத்தில் ‘கண்மணி’ கதாபாத்திரத்தில் பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி, பிரகாஷ் ராஜ், ஸ்ரீயா ரெட்டி, அர்ஜுன் தாஸ், ஷாம் மற்றும் ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டி.வி.வி என்டர்டெயின்மென்ட்டின் கீழ் டி.வி.வி தனய்யா தயாரித்துள்ளார். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.இப்படம் வரும் 25ம் தேதி வெளியாகிறது. படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. பவன் கல்யாணின் ‘ஓஜி’ படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.இந்நிலையில் பவன் கல்யாணின் ‘ஓஜி’ படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. ‘ஓஜி’ திரைப்படத்திற்கு 25ம் தேதி காலை 1 மணி சிறப்புக் காட்சிக்கு ஆந்திர மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், படத்தின் டிக்கெட் விலையாக ரூ.1000 வரை வசூலிக்கவும் மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.Censored as ‘A’.Celebrated as ABSOLUTE FIRE #OG #TheyCallHimOG pic.twitter.com/DOkEkGNA6y
மூலக்கதை
