பிலிப்பைன்ஸ் வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

வாஷிங்டன்,இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று அமெரிக்கா சென்றார். அவர் நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபை கூட்டம் பங்கேற்கிறார். இந்நிலையில், பிலிப்பைன்ஸ் வெளியுறவுத்துறை மந்திரி டெஸ் லசரொவை நியூயார்க்கில் ஜெய்சங்கர் சந்தித்தார். இந்த சந்திப்பிபோது, இருநாட்டு உறவு, பாதுகாப்பு, அரசியல் ஒத்துழைப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். முன்னதாக, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மார்கஸ் கடந்த மாதம் இந்தியா வந்திருந்தார். அவர் பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலக்கதை
